மேட்டூரில் இருந்து 50 கி.மீட்டர் தொலைவில் உள்ள மாதேஸ்வரன் கோவிலுக்கு ஒவ்வொரு அமாவாசை நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். தமிழக பக்தர்கள் மாதேஸ்வரன் மலைக்கு சிரமமின்றி செல்வதற்கு சேலம் கோட்டம் சார்பில் 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சேலம் புதிய பேருந்து நிலையம், மேட்டூர் மேச்சேரி உள்ளிட்ட பகுதியிலிருந்து சிறப்பு பேருந்துகள் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.