மேட்டூர் சாலையில் ஆறாக ஓடும் சாக்கடை நீர் மக்கள் கடும் அவதி

58பார்த்தது
மேட்டூர் சாலையில் ஆறாக ஓடும் சாக்கடை நீர் மக்கள் கடும் அவதி
சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. நகராட்சியின் பெரும்பாலான பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பாதாள சாக்கடை பணிகள் சரிவர நிறைவேற்றப்படவில்லை என்றும், அப்படியே நிறைவேற்றப்பட்ட பணிகளிலும் சரிவர பராமரிப்பு செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. அதனால் அடிக்கடி ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் சாலையில் ஆறாக ஓடுவதும், அதனை சரி செய்வதுமான நிகழ்வு அடிக்கடி மேட்டூர் நகராட்சியில் நடந்து வருகிறது. அதே போன்றுதான் மேட்டூர் பழைய மார்க்கெட் பகுதியில் பாதாள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாக்கடை நீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலையில் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் தெருக்களில் துர்நாற்றம் வீசுவதுடன் கடை வீதிகளில் நடமாட முடியாத நிலை உள்ளது. மேலும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு ஒரு வாரம் ஆகியும் அதனை இன்னும் சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல் நகராட்சி அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாதாள சாக்கடை அடைப்பால் வியாபாரிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். எனவே போர்க்கால அடிப்படையில் சாக்கடை கால்வாய் அடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி