சேலம் மேற்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

60பார்த்தது
சேலம் மேற்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மே மாதம் நடைபெறும் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு குறித்து சேலம் மேற்கு மாவட்ட பா. ம. க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மேட்டூரில் நடந்தது. கூட்டத்திற்கு, மேட்டூர் தொகுதி எம். எல். ஏ. வும், கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளருமான எஸ். சதாசிவம் தலைமை தாங்கினார். 

இதில் மாநில வன்னியர் சங்க செயலாளர் மு. கார்த்தி, சேலம் மேற்கு மாவட்ட மாநாடு ஒருங்கிணைப்பாளர் பி. என். குணசேகரன், சேலம் மேற்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் மே. வெ. ராமகிருஷ்ணன், சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலாளர் வக்கீல் துரைராஜ், சேலம் மேற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் வி. இ. ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் எம். சி. மாரப்பன், சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட மாணவரணி செயலாளர் டி. ஆர். பி. அருண்குமார் மற்றும் கட்சியின் ஒன்றிய செயலாளர், பேரூர் செயலாளர்கள், நகர செயலாளர்கள் உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மேட்டூர் நகர செயலாளர் மதியழகன் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி