சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த தாழையூர் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 21). இவர் கோவையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். நேற்று காலை இவர் மேட்டூர் புதுச்சாம்பள்ளியை அடுத்த, குருவா காடு மின் மயானம் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த கருமலைக்கூடலை சேர்ந்த ரவுடி ரவிக்குமார் (20) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 600-ஐ தனசேகரனிடம் இருந்து பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டார். இது குறித்து தனசேகரன் கொடுத்த புகாரின் பேரில், கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிந்து ரவிக்குமாரை கைது செய்தனர்.