நீர்த்தேக்க பகுதியில் மீன் குஞ்சுகளை விட்ட எம். எல். ஏ

65பார்த்தது
நீர்த்தேக்க பகுதியில் மீன் குஞ்சுகளை விட்ட எம். எல். ஏ
மேட்டூர் மீன்வளத்துறை சார்பாக மேட்டூர் அணை நீர் தேக்க பகுதியான கீரைக்காரனூர் பகுதியில் 5. 11 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது இதில் தலைமையேற்ற மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். சதாசிவம் அவர்கள் மேட்டூர் அணையில் மீன் குஞ்சுகளை விட்டார் இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மண்டல மீன்வளத்துறை துணை இயக்குனர் சுப்பிரமணி மேட்டூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் உமா கலைசெல்வி கிருஷ்ணகிரி மீன்வளத்துறை உதவி இயக்குனர் ரத்தினம் மேட்டூர் மீன்வளத்துறை ஆய்வாளர் தேவதர்ஷினி கிருஷ்ணகிரி மீன்வளத்துறை ஆய்வாளர் கதிர்வேல் சிவம் குரூப் ஆப் கம்பெனி நிர்வாக இயக்குனர் சங்கர் சதாசிவம், கூனாண்டியூர் முன்னாள் தலைவர் கூபா கோவிந்தன் மேச்சேரி ஒன்றிய பாமக மீனவர் அணி செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மீன் குஞ்சுகள் ஆற்றல் விட்ட பிறகு மீனவர்களிடம் உரையாற்றிய மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஆற்றில் விடப்பட்ட மீன் குஞ்சுகளை நன்கு வளரும் வரை பாதுகாப்பது ஒவ்வொரு மீனவரின் கடமையாகும் மேலும் மீன்வளத் துறை சார்பாக தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு மீன்கள் நன்கு வளரும் வரை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்

தொடர்புடைய செய்தி