இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்குக்கான நீர்வரத்து வினாடிக்கு 15,888 கன அடியிலிருந்து 17,272 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 116.24 அடி உள்ள நிலையில் நீர் இருப்பு 87.60 டி.எம்.சி.யாக உள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 19,000 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 700 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.