மேட்டூர் அருகே நங்கவள்ளியில் இலவச மருத்துவ முகாம்.

52பார்த்தது
மேட்டூர் அருகே நங்கவள்ளி சமட்டியூர் பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் இலவச சர்க்கரை பரிசோதனை ரத்த அழுத்த பரிசோதனை பச்சிளம் குழந்தைகளுக்கு சரியான வளர்ச்சி மற்றும் இடையில் உள்ளதா என்பதை கண்டறிந்து அதற்கான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது, பச்ச்சிளம் சிறார்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை கண்டறிந்து பசியின்மையை போக்கும் வகையில் பசியை தூண்டும் வகையில் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. கர்ப்பிணி பெண்களுக்கு இரத்தம் பரிசோதனை தள்ளுபடி விலையில் வழங்கப்பட்டது. பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய் சேய் ஊட்ட சத்து நிபுணர் மூலமாக ஆலோசனை மற்றும் ஆறு மாதத்திற்கு மேல் குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முறைகள் பற்றி ஆலோசனைகள் வழங்குதல். 60 வயது மேல் உள்ளவர்களுக்கு இலவசமாக இ. சி. ஜி, பரிசோதனை செய்யப்பட்டது. கர்ப்பிணி பெண்களுக்கு சிறுநீரக சர்க்கரை, பரிசோதனை, தைராய்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நாங்கவள்ளி, வனவாசி, ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று சென்றனர்.
மருத்துவர்கள் சிவக்குமார், ஜோதி ஸ்ரீ சிவக்குமார் ஆகியோர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
இதில் கலந்துகொண்ட நோயாளிகளுக்கு 1. 40 லட்சம் மதிப்பில் இலவசமாக மருத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி