சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே வெள்ளக்காரட்டூர் கிராம பகுதியில் சிறுத்தை புலி அட்டகாசம் செய்து வருகிறது. அந்தக் கிராமத்தில் உள்ள ஆடு, கோழிகளை கடித்து குதறுவதுடன் மக்களையும் சிறுத்தை புலி பீதி அடைய செய்துள்ளது. இதனை அறிந்த வனத்துறையினர் அந்தக் கிராமத்தில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் சிறுத்தை புலியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியிலிருந்து பயிற்சி பெற்ற வனத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் சிறுத்தை புலியை தேடி வந்தனர்.
இதற்கிடையே கருங்கரடு பகுதியில் நேற்று முன்தினம்(செப்.17) இரவு நாய் ஒன்றை சிறுத்தை புலி கடித்து குதறியது. நேற்று மதியம் வெள்ளக்கரடூர் கிராமத்தில் சாமித்துரை என்ற விவசாயி ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று இருந்தார். அதில் ஒரு ஆடு நிறைமாத கர்ப்பமாக இருந்தது. அந்த ஆடு குட்டி ஈனும் தருவாயில் இருந்தது. மற்ற ஆடுகளைவிட அந்த ஆட் டின் மீது சாமித்துரை அதிக அக்கறை காட்டி வந்தார்.
இதளிடை நேற்று மதியம் மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் அந்த ஆடு குட்டி ஈன்ற தொடங்கியது. ஒரு குட்டியை ஈண்ட நிலையில், புதரில் மறைந்து இருந்த சிறுத்தை புலி அந்த ஆட்டின் மீது பாய்ந்து கடித்து குதறியது. இதில் ஆடும், அது ஈன்ற குட்டியும் பரிதாபமாக இறந்தன. இதைக்கண்டு விவசாயி சாமித்துரை அதிர்ச்சி அடைந்தார். ஆட்டைக் கண்டு கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.