தலைவாசல் கல்லூரி மாணவிகள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

50பார்த்தது
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஆறகளூரில் கைலாஷ் மகளிர் கல்லூரி மாணவிகள் நாட்டு நலப்பணி திட்டத்தின் மூலம் ஆறகளூர் சிவன் கோயில், பெருமாள் கோயில், அரசு பள்ளிகள் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இன்று போதை ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒழிப்போம் ஒழிப்போம் போதையை ஒழிப்போம் என்ற பதாகைகள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியும் முக்கிய வீதிகள் வழியாக போதை ஒழிப்பு பேரணி நடைபெற்றது. கல்லூரி தாளாளர் உள்ளிட்ட ஆசிரிய பெருமக்கள் கல்லூரி மாணவிகள் பங்கேற்பு.

தொடர்புடைய செய்தி