கெங்கவல்லி அருகே சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்ட பூபதி வயது25). இவர் நேற்று மோட்டார் சைக்கி ளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். அக் கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து கெங்கவல்லி போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.