சேலம் மாவட்டம் தலைவாசல் மத்திய ஒன்றிய தி. மு. க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழா நடந்தது. ஒன்றிய கட்சி அலுவலகம் எதிரில் கருணாநிதி உருவப்படத்துக்கு ஒன்றிய செயலாளர் சாத்தப்பாடி மணி என்ற பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சி கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கெங்கவல்லி தொகுதி முன்னாள் எம். எல். ஏ. குணசேகரன், ஒன்றிய அவைத் தலைவர் பிச்சமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.