கெங்கவல்லி: ஈஷா ஆதியோகி சிவன் ரதம் சுற்றுப்பயணம்

54பார்த்தது
கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா சிவன் ஆலயத்தில் மஹா சிவராத்திரி இந்த ஆண்டும் வருகின்ற மாசி மாதம் நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக கோவை ஈஷா மையத்திலிருந்து. கடந்த மாதம் 24ஆம் தேதி ஆதியோகி சிவன் ரதம் புறப்பட்டு வடலூரில் உள்ள ஈஷா கார்டனில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்று (ஜனவரி 8) தலைவாசல், வீரகனூர், கெங்கவல்லி ஆகிய இடங்களிலும் வழிநெடுக தரிசனம் செய்தனர். சேலம் சென்றபோது கெங்கவல்லியில் ஆதியோகி சிவன் ரதத்திற்கு அங்குள்ள பொதுமக்கள் தீபாராதனை காண்பித்து ஆதியோகி சிவனை தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி