'காளிதாஸ் 2' பர்ஸ்ட் லுக்.. அப்டேட் கொடுத்த பரத்

78பார்த்தது
'காளிதாஸ் 2' பர்ஸ்ட் லுக்.. அப்டேட் கொடுத்த பரத்
2019-ம் ஆண்டு பரத் 'காளிதாஸ்' என்ற திரில்லர் படத்தில் நடித்து இருந்தார். போலீஸ் அதிகாரியாக நடித்த அந்தப்படம் மக்களிடையே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது, இதன் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவும், புவன் சீனிவாசன் படத்தொகுப்பும் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட்டை பரத் வெளியிட்டுள்ளார். அதன்படி, காளிதாஸ் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியாக உள்ளது.

தொடர்புடைய செய்தி