எடப்பாடியில் 68 வது வாரம் உணவு வழங்கிய விஜய் ரசிகர்கள்

2246பார்த்தது
நடிகர் விஜய் பொது மக்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளும் அன்னதானங்களும் வழங்கப்பட வேண்டும் என தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி விஜய் ரசிகர்கள் பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளையும் அன்னதானங்களும் வாரந்தோறும் வழங்கி வருகின்றனர். அதன்படி சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள தளபதி விஜய் ரசிகர் மன்றத்தினர் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

அதன்படி ஏப்ரல் 14ஆம் தேதி எடப்பாடி தளபதி விஜய் ரசிகர்கள் தாவாந்தெரு காளியம்மன் கோவில் அருகில் இட்லி மற்றும் புத்தாண்டை ஒட்டி இனிப்புகள் வழங்கினர். தொடர்ந்து 68 ஆவது வாரமாக ஏழை எளிய மக்களுக்கு எடப்பாடி தளபதி விஜய் ரசிகர்கள் அன்னதானம் வழங்கி வருவது சிறப்பு.

தொடர்புடைய செய்தி