சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன். இவரது பதவி காலம் வருகிற 30-ந்தேதி முடிவடைகிறது. புதிய துணை வேந்தரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பல்கலைக்கழகம் சார்பில் பிரதிநிதிகள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு, கடந்த மார்ச் மாதம் 9-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில், ஆட்சி பேரவை பிரதிநிதியாக தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பாஸ்கரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஆட்சிக்குழு பிரதிநிதி பதவிக்கு சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் தங்கராசு, நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பிச்சுமணி ஆகியோர் போட்டியிட்டனர். நேற்று நடைபெற்ற தேர்தலில் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் தங்கராசு 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பிச்சுமணி 6 வாக்குகள் பெற்றார். இதையடுத்து, வெற்றி பெற்றதற்கான சான்றிதழை, தங்கராசுவிடம், தேர்தல் அலுவலர் விஸ்வநாதமூர்த்தி வழங்கினார்.