டீ’யில் சர்க்கரை குறைவால் பேக்கரியை சூறையாடிய கும்பல்

78பார்த்தது
டீ’யில் சர்க்கரை குறைவால் பேக்கரியை சூறையாடிய கும்பல்
எடப்பாடியை அடுத்த தேவூர் அண்ணமார் கோவில் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 42). இவர் எடப்பாடி அடுத்த ஆலச்சம்பாளையம் அருகே உள்ள புறவழிச்சாலையில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவரது பேக்கரியில் திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த ரவி (37), டீ மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று மாலை ஆலச்சம்பாளையம் பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளியான மகாராஜன் என்பவர் லட்சுமணனின் பேக்கரிக்கு டீ குடிக்க வந்துள்ளார். அப்போது அவர் வாங்கிய டீயில் சர்க்கரை குறைவாக இருப்பதாக கூறி டீ மாஸ்டர் ரவியிடம் கூடுதலாக சர்க்கரை போடும்படி கேட்டுள்ளார்.
இதில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக முற்றிய நிலையில் மகாராஜன் மீது டீ கொட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மகாராஜனின் உறவினர்கள் அங்கு கும்பலாக திரண்டு வந்து சம்பந்தப்பட்ட பேக்கரியை அடித்து நொறுக்கி சூறையாடினர். மேலும் மோதலின் போது காயம் அடைந்த மகாராஜன் மற்றும் டீ மாஸ்டர் ரவி ஆகியோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த எடப்பாடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி