ஆத்தூர் அழுகிய நிலையில் ஆண் சடலம் போலீசார் விசாரணை

80பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் சின்னமசமுத்திரம் இரண்டாவது வார்டு பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் வெட்டி ( எ) ஆறுமுகம் இவர் திமுக முன்னாள் வார்டு உறுப்பினராக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி காணாமல் போனதாக அவரது குடும்பத்தார் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் இன்று ஒட்டப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தளவாய்பட்டி முருகன் கோவில் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று இருப்பதாக ஏத்தாப்பூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கடந்த 12ஆம் தேதி காணாமல் போன முன்னாள் திமுக வார்டு உறுப்பினர் ஆறுமுகம் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து உடலை கைப்பற்றி போலீசார் கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி