ஆத்தூர்: கூரை வீட்டில் தீ விபத்து; பொருட்கள் சேதம்

70பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதிகளில் திடீரென அரை மணி நேரத்திற்கு மேலாக சூறாவளி காற்று வீசியது. இந்நிலையில் கோட்டை பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் வெங்கடேசன் என்பவருக்குச் சொந்தமான தகரத்தால் கூரை வீட்டில் பழைய பொருட்களை வைத்திருந்தார்.

சூறாவளி காற்றால் கூரை வீட்டின் மேல் பகுதியில் இருந்த மின் கம்பிகள் உரசியதில் தீப்பொறி பட்டு தீ பற்றியுள்ளது. திடீரென வீடு முழுவதும் தீ கொழுந்து விட்டு எறிந்த நிலையில் வீட்டிலிருந்த பழைய பொருட்கள் எரிந்து சேதமானது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆத்தூர் தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்தனர். விபத்து குறித்து ஆத்தூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி