ஆத்தூர் அருகே ஏரியில் மண் அறிய டிராக்டர்கள் மற்றும் ஜேசிபி எந்திர வாகனங்களை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே ஈச்சம்பட்டி ஏரியில் அனுமதியின்றி மண் அள்ளுவதாக வருவாய்த்துறையினருக்கு புகார் சென்றது. புகாரின் அடிப்படையில் வருவாய் துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அனுமதி இன்றி மண் அள்ளிய இரண்டு ஜேசிபி வாகனங்கள் மற்றும் ஐந்து டிராக்டர்களை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.