சேலம் மாவட்டம் வடஅழகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகணேஷ். இவரது மகன் பிரவீன் வயது 13 அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று(பிப் 3) காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற பிரவீன் வீடு திரும்பவில்லை. பள்ளிக்கும் செல்லவில்லை என்ற கிடைத்த தகவலை எடுத்து அழகாபுரம் போலீசில் புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து அழகாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.