ஆத்தூரில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

72பார்த்தது
ஆத்தூரில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
ஆத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் அடிக்கடி திருட்டு போனது. இதுபற்றி துப்பு துலக்க குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டம் மேரிபுரம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (வயது 48) என்பவர் ஆத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடியது தெரிய வந்தது. இதை தொடர்ந்து ஹரிஹரனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி