ஆத்தூரில் ஆதிபராசக்தி கோவில் சார்பில் நடைபெற்ற பால்குட ஊர்வலத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் ராணிப்பேட்டை பகுதியில் ஆதிபராசக்தி கோவில் உள்ளது. ஆடி மாதத்தில் கடைசி வெள்ளியையோட்டி பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக வந்த பெண்கள் கோவிலில் உள்ள அம்மனுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர். இதில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்தனர்.