ஆத்தூரில் கனமழை தேநீர் கடையில் புகுந்த மழை நீர்

59பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு கனமழை கொட்டி தீர்த்தது. ஆத்தூர் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தென்னங்குடி பாளையம், நரசிங்கபுரம், கொத்தாம்பாடி, செல்லியம்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. கன மழை காரணமாக சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தென்னங்குடி பாளையம் பகுதியில் உள்ள சாலையோர தேநீர் கடையில் மழை நீர் புகுந்ததால் சிரமத்திற்கு உள்ளாகினர். கனமழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி