மக்களிடையே டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் பழக்கம் அதிகரித்து வருகின்றது. சிறு வணிகர்களும் கூகுள் பே, போன் பே மூலம் பணம் வசூலிக்கும் முறையை பின்பற்றுகின்றனர். இதனால் மக்கள் ATMஐ பயன்படுத்துவது வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஆண்டு மட்டும் 4,001 ATMகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் 34.70 லட்சம் கோடி புழக்கத்தில் உள்ள நிலையில், 1 லட்சம் பேருக்கு 15 ATM என்கிற விகிதமே உள்ளது.