பைக் ஓட்டுநர் தலையில் விழுந்த சாக்கு மூட்டைகள்: அதிர்ச்சி வீடியோ

51பார்த்தது
மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள பஜ்ரங்கர் பாலத்தில் நேற்று(ஏப்ரல் 13) அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லாரி ஒன்று அதிக அளவிலான மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில், அந்த வழியாக ஓரமாக சென்று கொண்டிருந்த பைக் மீது முட்டைகள் சரிந்து விழுந்தது. இதில் கணவருடன் பைக்கில் சென்ற பெண் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி