முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது குறித்து திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், இந்திய தேசத்தின் குடிமக்களே, இப்போ புரிகிறதா? பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் வரை அமலாக்கத்துறை வராது என பதிவிட்டுள்ளார். மக்களவைத் தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு பாஜக பல்வேறு தலைவர்களை அதிமுகவிடம் தூது அனுப்பியும் கூட்டணிக்கு செவிமடுக்காக நிலையில், இந்த சோதனை நடத்தப்பட்டு கொண்டிருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.