சென்னை: பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பச்சையப்பன் கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. ஆனால், தாமதமாக கல்லூரிக்குச் சென்ற மாணவர்களை பொங்கல் விழாவில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள், சாலையில் சென்ற பேருந்துகள் மீது ஏறி ரகளையில் ஈடுபட்டனர். மேலும், சாலையில் கோஷமிட்டமிட்டபடி ஊர்வலமாக சென்று அட்டகாசம் செய்தனர்.