மதுரையை சேர்ந்த கார்த்திகேயன், மாநகராட்சி பணியாளராக பணியாற்றிவருகிறார். இவர் தினமும் நடந்து வேலைக்கு செல்வதை பார்த்த இவரது தாயார் கடந்த 2002ஆம் ஆண்டு சிறுக சிறுக பணம் சேர்த்து பைக் வாங்கிக்கொடுத்துள்ளார். இந்நிலையில், 22 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இந்த பைக் திருடுபோயுள்ளது. இது தொடர்பாக போலீசில் புகார் அளித்த கார்த்திகேயன், பைக்கை காணவில்லை கண்டுபிடித்துக்கொடுத்தால் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்.