'நன்ஹே ஃபரிதா' திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 84,119 குழந்தைகளை ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) மீட்டுள்ளது. இந்த நிலையில், ரயில்வே அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தப்பியோடியவர்கள், கடத்தப்பட்டவர்கள், தெருவோர குழந்தைகள், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் அனாதைகள் உள்ளனர். ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் ஆர்பிஎஃப் படையினரால் அடையாளம் காணப்பட்டு, மாவட்ட குழந்தைகள் நலக் குழுவால் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.