ATM-ல் கொள்ளை முயற்சி.. வடமாநில இளைஞர் கைது

579பார்த்தது
ATM-ல் கொள்ளை முயற்சி.. வடமாநில இளைஞர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே தனியார் ஏடிஎம் ஒன்றில் இன்று (செப்.28) அதிகாலை கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார், அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, சாலையோரம் மது போதையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இருந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் அசாமைச் சேர்ந்த சம்சுல் அலி என்பதும், ஏடிஎம்-ல் கொள்ளை அடிக்க முயற்சி செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி