வெப் சீரிஸ் ஒன்றை உருவாக்கும் ரிசர்வ் வங்கி!

81பார்த்தது
வெப் சீரிஸ் ஒன்றை உருவாக்கும் ரிசர்வ் வங்கி!
1935-ல் தொடங்கப்பட்ட ரிசர்வ் வங்கி, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் 90 ஆண்டுகளை நிறைவு செய்தது. ரிசர்வ் வங்கியின் 90 ஆண்டுகால பயணத்தை நினைவுகூரும் வகையில், அதன் பயணத்தைப் பற்றிய விரிவான காட்சியை வழங்க ஐந்து எபிசோடுகளை கொண்ட வெப் தொடரை வெளியிட திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், ஒவ்வொரு எபிசோடும் 25-30 நிமிடங்கள் கொண்டதாக இருக்கும். இது தேசிய தொலைக்காட்சி சேனல்கள் அல்லது ஓ.டி.டி. தளங்களில் ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி