தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் குறித்து அறிக்கை

83பார்த்தது
தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் குறித்து அறிக்கை
தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் குறித்தான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. கட்சியின் தலைவராக நடிகர் ஜோசப் விஜய், பொதுச்செயலாளராக ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன், தலைமை கழகச் செயலாளர் ராஜசேகர், இணை கொள்கை பரப்பு செயலாளர் தகிரா‌ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நிர்வாகிகள் விவரம் பற்றி யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றால் விண்ணப்பித்தவர்களுக்கு பொறுப்பு ஒதுக்கப்பட்டு ஆணையத்தில் பதிவு செய்யப்படும்.

தொடர்புடைய செய்தி