காம்பிளான் பாக்கெட்டில் கிடந்த பல்லி (வீடியோ)

15441பார்த்தது
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே குழந்தைக்கு வாங்கப்பட்ட காம்பிளான் பாக்கெட்டில் எலும்புக்கூடாக பல்லி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்.முக்குளம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் - சீதா தம்பதியினருக்கு 1 வயதுகூட பூர்த்தியாகாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நரிக்குடியில் உள்ள தனியார் மெடிக்கலில் காம்பிளான் பாக்கெட் வாங்கி குழந்தைக்கு தினமும் கொடுத்து வந்துள்ளனர். அப்போது திடீரென ஒரு நாள் அந்த பாக்கெட்டில் பல்லியின் உடல் எலும்புக்கூடாக கிடந்துள்ளது. இதுகுறித்து அந்த மெடிக்கலில் சென்று கேட்டபோது முறையான பதில் கிடைக்கவில்லை என குழந்தையின் பெற்றோர் கூறியுள்ளனர்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி