வினேஷ் போகத் நீக்கம்: மத்திய அரசு விளக்கமளிக்க ராகுல் வலியுறுத்தல்

73பார்த்தது
வினேஷ் போகத் நீக்கம்: மத்திய அரசு விளக்கமளிக்க ராகுல் வலியுறுத்தல்
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இருந்து இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அனுமதிக்கப்பட்ட வரம்புகளை விட 100 கிராம் அளவுக்கு எடை அதிகமாக இருந்ததால் இந்த நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். பதக்கம் வெல்வார் என எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது இந்தியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி