ரேஷன் கடைகளுக்கு மண்ணெண்ணெய் சப்ளை குறைப்பு

81பார்த்தது
ரேஷன் கடைகளுக்கு மண்ணெண்ணெய் சப்ளை குறைப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 574 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் தேவைக்கு, வெறும் 12 கிலோ லிட்டர் மட்டுமே வருவதால், எரிவாயு சிலிண்டர் இல்லாத 52,686 வீடுகளில், எந்த வகையான அடுப்பை பயன்படுத்துகின்றனர் என்ற கணக்கெடுப்பு பணிகள் துவங்கியுள்ளன. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அவ்வப்போது பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம். இதில், மண்ணெண்ணெய் சப்ளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. ரேஷன் அட்டைதாரர்கள், தங்களுக்கான புதிய சிலிண்டர் இணைப்பை பெற்றுக்கொள்வதால், மண்ணெண்ணெய் சப்ளையை மத்திய அரசு குறைக்கிறது.

அந்த வகையில், இந்தாண்டு ஏப்ரல் மாதம், தமிழகம் முழுவதுமே மண்ணெண்ணெய் சப்ளை, மிக குறைவான அளவே மத்திய அரசு வழங்கியுள்ளது. இதனால், மண்ணெண்ணெயை நம்பி, சமையல் செய்து வந்த குடும்பத்தினர் பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி