"அரண்மனை 4" ஹாட்ஸ்டார் ரிலீஸ் தேதி அறிவிப்பு

71பார்த்தது
"அரண்மனை 4" ஹாட்ஸ்டார் ரிலீஸ் தேதி அறிவிப்பு
2014-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஹன்சிகா, ஆன்ட்ரியா, வினய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக 2016-ல் 'அரண்மனை 2', 2021-ல் 'அரண்மனை 3' படங்கள் வெளியாகின. இந்த வரிசையில் இந்த படத்தின் 4-வது பாகம் கடந்த மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த நிலையில் 'அரண்மனை 4' திரைப்படம் வருகிற 21-ந்தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி