ஒரே பிரசவத்தில் பிறந்த அபூர்வ இரட்டை யானைக் குட்டிகள்!

83பார்த்தது
ஒரே பிரசவத்தில் பிறந்த அபூர்வ இரட்டை யானைக் குட்டிகள்!
தாய்லாந்தில் ஒரு யானை வியத்தகு முறையில் இரட்டை குட்டிகளைப் பெற்றெடுத்துள்ளது. 36 வயதான ஜம்ஜூரி என்ற ஆசிய யானை வெள்ளிக்கிழமை இரவு பாங்காக்கின் வடக்கே உள்ள அயுதயா யானைகள் அரண்மனை மற்றும் ராயல் க்ரால் ஆகிய இடங்களில் 80 கிலோகிராம் (176-பவுண்டு) ஆண் குட்டியை ஈன்றது. ஆனால் 18 நிமிடங்களுக்குப் பிறகு இரண்டாவதாக, 60 கிலோ கிராம் கொண்ட பெண் குட்டியும் பிறந்தது. இரட்டைக் குட்டிகளை தாய் யானை அரவணைத்து பாதுகாப்பதாகவும், அது பாலூட்டுவதற்கு உதவும் வகையில் ஒரு சிறப்பு தளம் கட்டப்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி