சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிகழ்வு நெஞ்சைப் பதற வைக்கிறது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். "இந்த குற்றவாளிக்கு உடனடியாகக் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். பெண்களுக்கெதிரான எந்த வகை குற்றமாக இருப்பினும் துணிச்சலுடன் வெளிக்கொண்டு வருவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தித் தருவது ஒவ்வொருவரின் கடமை" என கூறியுள்ளார்.