மன்னிப்பு கோரிய ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம்

72பார்த்தது
மன்னிப்பு கோரிய ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம்
தவறான விளம்பரங்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருவதாக தொடரப்பட்ட வழக்கில், பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். இந்த வழக்கை இரண்டு நாட்களுக்கு முன்பு விசாரித்த உச்ச நீதிமன்றம், பதஞ்சலி நிர்வாக இயக்குநர் மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு கூறியது. உச்சநீதிமன்றம் ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், தவறான விளம்பரங்களை வெளியிடக்கூடாது என்பதை உறுதி செய்த பின்னரும் பதஞ்சலி இதைத் தொடர்ந்தது.

உச்ச நீதிமன்றம் தடை விதித்தும், விளம்பரங்களை வெளியிடுவது உள்நோக்கம் கொண்டதல்ல என்றும், வெளியிடப்பட்ட விளம்பரங்களை நீக்குவதாகவும், மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வதாக பதஞ்சலி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி