கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான பேச்சு போட்டி

78பார்த்தது
ராமநாதபுரத்தில் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான பேச்சு போட்டி

தமிழ்நாடு அரசு மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்தும் மாவட்ட அளவிலான அனைத்து கல்லூரி மாணவ மாணவியருக்கான 2025 ஆண்டிற்கான பேச்சுப்போட்டி ராமநாதபுரம் பாரதிநகரில் உள்ள வைஸ்ராய் திருமண மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் முகமது சதக் ஹமீது பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர். மீரா வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தலைமை வைத்தார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மாரிமுத்து முன்னிலை வைத்தார். பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தலைமையேற்று போட்டிகளை துவக்கி வைத்தார். ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ஏற்புறையை ஏற்றுக் கொண்டார். ராமநாதபுரம் பங்குத்தந்தை சிங்கராயர் வாழ்த்துரை வழங்கினார், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய பன்னீர்செல்வம் நிகழ்ச்சியின் நிறைவாக நன்றியுரை கூறி நிறைவு செய்தார். இப்ப பேச்சு போட்டியில் அனைத்து கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் திரளாக பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்படையச் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி