கற்காத்தக்குடி புனித இஞ்ஞாசியாா் தேவாலய திருவிழா கொடியேற்றம்

64பார்த்தது
கற்காத்தக்குடி புனித இஞ்ஞாசியாா் தேவாலய திருவிழா கொடியேற்றம்
திருவாடானை அருகே கற்காத்தக்குடி கிராமத்தில் உள்ள புனித இஞ்ஞாசியாா் தேவாலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதில் சி. கே. மங்கலம் பங்குத்தந்தை சேவியா் சத்தியமூா்த்தி, கற்காத்தக்குடி நல்லாயன் தியான இல்ல இயக்குநா் அருள்தந்தை மரிய லூயிஸ் ஆகியோா் தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக பங்குத்தந்தையா்களால் புனிதப்படுத்தப்பட்ட இஞ்ஞாசியாரின் உருவம் பொறித்த திருவிழா கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஜெபமாலையும், மறையுரையுடன் சிறப்புத் திருப்பலியும் நிறைவேற்றப்படும். ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி மாலை ஆடம்பர திருவிழா திருப்பலியும், இரவில் தோ்பவனியும் நடைபெறும். மறுநாள் 4-ஆம் தேதி காலை திருவிழா நிறைவு திருப்பலியும், இதைத் தொடா்ந்து தோ் பவனியும் நடைபெறும். பிறகு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடையும். விழாவுக்கான ஏற்பாடுகளை கற்காத்தக்குடி பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி