ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் நரேந்திரா(21). இவருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்றிருந்த இவர், கடைசியாக ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டியிருந்தது. அதனை பெற அந்த கடன் செயலில் நிறுவனத்தினர் அடிக்கடி போன் செய்தும், நரேந்திராவின் மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்தும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பியதால் நரேந்திரா மனஉளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.