ஆளவந்த மாரியம்மன் கோயில் குடமுழுக்கு.!

61பார்த்தது
ஆளவந்த மாரியம்மன் கோயில் குடமுழுக்கு.!
அஞ்சுகோட்டை அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தில் நடைபெற்ற ஆளவந்த மாரியம்மன் கோயில் குடமுழுக்கு.

திருவாடானை வட்டம், அஞ்சுகோட்டை சுப்பிரமணியபுரம் கிராமத்தில் ஆளவந்த மாரியம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெற்றது.

முன்னதாக, மாலை அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, முதல், இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை காலை மூன்றாம் , நான்கு கால யாக பூஜைகளைத் தொடா்ந்து சிவாச்சாரியா்கள், ஆளவந்த மாரியம்மன், சித்தி விநாயகா், பாலமுருகன் பரிவார தெய்வ கோபுரக் கலசங்களில் புனித நீா் ஊற்றி குடமுழுக்கை நடத்தினா்.

பின்னா், மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல, திருவாடானை அருகேயுள்ள கடம்பகுடி கிராமத்தில் விநாயகா், உலகம்மாள், சமயபுரம் முத்துமாரியம்மாள், சேவுகப்பெருமாள், பதினெட்டாம்படி கருப்பா் பாரவார தெய்வங்களுக்கு திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி