மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!

5815பார்த்தது
மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!
சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடியினர் தஞ்சம் அடைந்தனர்.  

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரைச் சேர்ந்த இளைஞரும், ஆறுமுகனேரியைச் சேர்ந்த பெண்ணும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் அவர்களது பெற்றோர்களுக்கு தெரிய வந்ததையடுத்து காதலர்கள் திடீரென மாயமாகினர். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் பதிவு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியினர் இன்று சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். தங்களுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்களால் அச்சுறுத்தல் உள்ளதாக புகார் தெரிவித்தனர். இதனையடுத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஷகிலா விசாரித்து, காதலர்களின் பெற்றோரை அழைத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார்.  

காதலர்கள் இருவரும் மேஜர் என்பதாலும், அவர்களை யாரும் சொந்தரவு செய்ய கூடாது என அறிவுரை கூறி காதலுடன் பெண்ணை போலீசார் அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி