தூத்துக்குடி - Thoothukudi

சின்னத்துரை ஜவுளி நிறுவனத்தின் சார்பில் கல்வி உதவித் தொகை

தூத்துக்குடி கே. சின்னத்துரை அன்கோ நிறுவனத்தின் சார்பில் பணியாளர் குடும்பத்தினருக்கு ரூ. 3லட்சம் மதிப்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நடைபெற்றது. தென் தமிழகத்தில் புகழ்பெற்ற, திருச்செந்தூர் மற்றும் ஏரலில் மக்களின் பேராதரவை பெற்ற பிரபல பிரபல ஜவுளி நிறுவனமான கே. சின்னத்துரை அன்கோ, தூத்துக்குடி தமிழ் சாலையில் இயங்கி வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதலாம் ஆண்டு செல்லும் பணியாளர்களின் குழந்தைகள் 13 பேருக்கு ரூ. 3லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. நிறுவன பங்குதாரர்கள் செல்வராஜ், எஸ். அரிராமகிருஷ்ணன், கே. திருநாவுக்கரசு, கீர்த்திவாசகன் ஆகியோர் கல்வி உதவித் தொகையை வழங்கி பேசுகையில், "கே. சின்னத்துரை நிறுவனம் பணியாளர்களின் உழைப்பால் வளர்ச்சி அடைந்து வருகிறது. அவர்களின் இளைய தலைமுறைக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்குவதில் பெருமைப் படுகிறோம். மகிழ்ச்சி அடைகிறோம். வாடிக்கையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளோம். அந்த வகையில் கல்வி உதவித் தொகை வருடம் தோறும் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். விழாவில் வஉசி கல்லூரி பேராசிரியர் ராஜா வாழ்த்துரை வழங்கினார். விழா ஏற்பாடுகளை மேலாளர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

வீடியோஸ்


தூத்துக்குடி