விடுமுறை நாள்: ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் கூட்டம்.!

63பார்த்தது
தென்னகத்து காசி என அழைக்கப்படும் ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி திருக்கோவில் புகழ்பெற்ற தலமாக விளங்குகின்றது. இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து கடலில் புனித நீராடி செல்கின்றனர், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருவது வழக்கம். நேற்றும் இன்றும் விடுமுறை நாள் என்பதால் ராமேஸ்வரத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

புனித நீராடுவதற்கு பக்தர்களின் கூட்டம் அலைமோதி காணப்படுகின்றது, மேலும் பக்தர்கள் அனைவரும் முன்னோர்களுக்கு திதி கொடுத்து கோவிலில் உள்ள 21 தீர்த்த கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்து வருகின்றனர், மேலும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததால் பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

ராமேஸ்வரத்திற்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என அனைவரும் அப்துல் கலாம் நினைவு மண்டபம், தனுஷ்கோடி கடற்கரை மற்றும் கோந்தாண்ட ராமர் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சென்று பார்வையிடவதால் அப்பகுதிகளிலும் கூட்டம் அலைமோதி காணப்படுகின்றது, அதனால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்கும் வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி