நீண்ட நாட்களுக்கு பிறகு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் திடீர் மழை
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று மதியம் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து பரமக்குடி, எமனேஸ்வரம், ஜீவாநகர், பெரும்பச்சேரி போன்ற சுற்று வட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக லேசான மழை பெய்தது. இதனால் சற்று வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சுழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்