பரமக்குடி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு ஒத்திவைப்பு
பரமக்குடியில் 9 ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அதிமுக நிர்வாகியும், நகராட்சி கவுன்சிலருமான சிகாமணி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சிகாமணி சிறையில் உள்ள நிலையில் 5 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். குற்றம்சாட்டப்பட்ட 5 பேரையும் வக்காலத்து தாக்கல் செய்ய உத்தரவிட்டு நீதிபதி வழக்கை நவ. 8 க்கு ஒத்திவைத்தார்.