நடமாடும் மண் பரிசோதனை முகாம்.!

69பார்த்தது
நடமாடும் மண் பரிசோதனை முகாம்.!
ராமநாதபுரம் மாவட்டம், போகலூா் ஒன்றியத்துக்குள்பட்ட காமன்கோட்டை, பொட்டிதட்டி கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் மூலம் நடமாடும் மண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் மண் மாதிரிகள் எவ்வாறு வயலில் சேகரம் செய்யவேண்டும் என்பது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து, கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்களது வயல்களின் மண்ணை சேகரித்து நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலா் உமாதேவியிடம் வழங்கினா். மண் பரிசோதனை நிலைய அலுவலா்கள் மண் மாதிரியை ஆய்வு செய்து மண்வள அட்டை வழங்கினா்.

இந்த அட்டையில் மண்ணில் உள்ள பேரூட்டச் சத்துக்களான தழை, மணி, சாம்பல், இரும்புச் சத்துகள், நுண்ணூட்ட சத்துக்களான கந்தகம், இரும்பு, துத்தநாகம் , போரான், மாங்கனீஸ், தாமிர சத்துக்களின் விகிதம், அமில நிலை, உப்பின் நிலை, அங்கக கரிம இருப்பு ஆகியவை பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. மண்வள அட்டையைப் பயன்படுத்தி விவசாயிகள் வேளாண் துறையினரின் ஆலோசனையை பெற்று, பயிா் சாகுபடி செய்வதன் மூலம் அதிக மகசூல் பெறலான் எனத் தெரிவித்தனா்.

தொடர்புடைய செய்தி