புதிய பேருந்து வழித்தடங்களை தொடங்கி வைத்த அமைச்சர்.!

63பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையத்தில் புதிய போக்குவரத்து சேவையை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ரிப்பன் வெட்டி கொடியைசைத்து தொடக்கி வைத்தார். இந்த நிகழ்வில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன், பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கௌர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராமேஸ்வரம் - திருச்சி, சாயல்குடி - திருப்பூர், ஏர்வாடி - ஈரோடு உள்ளிட்ட ஏழு வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டது.

போக்குவரத்து துறை என்பது பொதுமக்களின் சேவைக்குரிய துறை. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் மட்டுமே பேருந்து கட்டணம் விலை குறைவாக உள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவாக உள்ளதால் தமிழக முதல்வருக்கு நன்றி சொல்ல வேண்டும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் பரமக்குடி சார் ஆட்சியர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறுகின்றனர். அதிகாரிகள் எந்த மாநிலமாக இருந்தாலும் வேலை செய்தால் போதும். இந்தியா என்பது ஒரு நாடு. நாம் இந்தியர்கள் அடுத்து தமிழர்கள் எல்லாரும் நமது சகோதரர்கள் என பேசினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி